சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் உதவித்தொகை பெற சிறப்பு முகாம்


சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் உதவித்தொகை பெற சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:45 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் உதவித்தொகை பெற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தென்காசி

சுரண்டை:

பழனிநாடார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்துக்கு வருவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் இன்று(புதன்கிழமை) சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து மரண உதவித்தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Next Story