பழனி அழகுநாச்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


பழனி அழகுநாச்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x

பாதயாத்திரை பக்தர்களின் நலனுக்காக, பழனி அழகுநாச்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பாதயாத்திரை வரும் பக்தர்களின் நலனுக்காக பழனி கிரிவீதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆனந்த விநாயகர் சன்னதி, வீரதுர்கையம்மன் கோவில் ஆகியவற்றில் பூஜை நடந்தது. இந்நிலையில் நேற்று பழனி கிழக்கு கிரிவீதியில் உள்ள அழகுநாச்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

முன்னதாக அங்கு கலசபூஜை, புண்ணியாக வாஜனம், பாராயணம், கணபதி ஹோமம் நடைபெற்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், கோவில் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story