அருணாச்சலம் மகா அன்னதான மடத்தின் சார்பில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சந்திரலிங்கம் சன்னதியில் அருணாச்சலம் மகா அன்னதானம் மடத்தின் சார்பில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை. மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சந்திரலிங்கம் சன்னதியில் அருணாச்சலம் மகா அன்னதானம் மடத்தின் சார்பில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை. மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதான மடம்
திருவண்ணாமலை காஞ்சி சாலை கிரிவலப்பாதையில் சந்திரலிங்கம் சன்னதி அருகில் அருணாச்சலம் அன்னதானம் மடம் அமைந்துள்ளது.
இந்த மடத்தின் சார்பில் பவுர்ணமி மட்டுமின்றி கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் கிரிவலம் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அதன் நிறுவனத் தலைவரும், பா.ஜ.க. ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளருமான கோ.அருணாச்சலம் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த மடத்தில் நாகாத்தம்மன் கோவிலும், ஆதிசங்கரர், ராமானுஜர் சிலைகளும், நுழைவு வாயில்களும் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாசி மாத மகா சிவராத்திரி மற்றும் சனி பிரதோஷ நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அருணாச்சலம் மகா அன்னதான மடத்தின் சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு உலக நன்மைக்காக கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள சந்திரலிங்கம் கோவிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு மற்றும் பூஜையும், அன்னதானமும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அருணாச்சலத்தின் ஆன்மிக குடும்பம் முழுமையாக தங்களை பக்தி வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொண்டு பிரதோஷ வழிபாட்டினை செய்தனர்.
ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம்
அப்போது அருணாச்சலம் மகா அன்னதான மடத்தின் நிறுவனத் தலைவர் அருணாச்சலம் தலைமையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கிரிவலம் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
பின்னர் அவர் அன்னதானம் பெற்று சென்ற பக்தர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சந்திரலிங்க சன்னதியில் அருணாசலம் மகா அன்னதான மடத்தின் சார்பில் உலக நன்மைக்காகவும், பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடரவும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு பவுர்ணமி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் இங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக அன்னதான மண்டபம் கட்டி 3 வேளையும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது மட்டுமன்றி பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களின் பிறந்த நாளிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
பாரத பிரதமரின் 73-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 73 ஊராட்சிகளில் மடத்தின் அன்னதானம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த அன்னதான நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியத்தின் மூலமாக இளையராஜா எம்.பி.யை அழைத்து விழா நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.