எல்லையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை


எல்லையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை
x

நாட்டறம்பள்ளி அருகே எல்லையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் பகுதியில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அம்மனுக்கு பூங்கரங்கம் எடுத்தல், மாவிளக்கு போன்ற பல்வேறு வேண்டுதலை நிறைவேற்றி அப்பகுதி கிராம மக்கள் வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து கிராமங்கள் செழிக்கவும், கிராம மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் எல்லையில் உள்ள எல்லை அம்மனுக்கு வழிபாடு செய்வதற்காக கிராம மக்கள் காலையில் தங்களது வீடுகளை பூட்டிக்கொண்டு, ஊரை விட்டு வெளியேறி எல்லையம்மனுக்கு மாலை வரை சிறப்பு பூஜைகளும் ஆராதனையும் செய்தனர்.

அதன் பிறகு சிறப்பு வழிபாடு செய்து கிடா வெட்டி பூஜைகள் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி அதன் பிறகு தங்களது வீட்டிற்கு சென்றனர்.


Next Story