தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே


தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே
x

கோப்புப்படம்

தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

குடியரசு தினத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

* தாம்பரம்-நாகர்கோவில் (வண்டி எண்:06053) இடையே வருகிற 25-ந் தேதி இரவு 10.20 மணிக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும்.

மறுமார்க்கமாக, நாகர்கோவில்-தாம்பரம் (06054) இடையே வருகிற 29-ந் தேதி மாலை 4.15 மணிக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும்.

* தாம்பரம்-நெல்லை (06021) இடையே வருகிற 26-ந் தேதி இரவு 9 மணிக்கும், மறுமார்க்கமாக, நெல்லை-எழும்பூர் (06022) இடையே வருகிற 27-ந் தேதி மதியம் 1 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story