அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

திருச்சுழி,

மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் மீனாட்சி அம்மன் வளையல் அலங்காரத்திலும், பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோவிலில் அம்மன் அக்னிச்சட்டி எடுக்கும் பக்தை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதேபோல திருச்சுழி திருமேனி நாதர் கோவிலில் துணைமாலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி குகன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்

தாயில்பட்டி

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பச்சையாபுரம் தெற்கு தெரு கழுவுடை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதேபோல தாயில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில், கோட்டையூர் சக்தி மாரியம்மன் கோவில், மடத்துப்பட்டி மாரியம்மன் கோவில், கனஞ்சாம்பட்டி பாதாள துர்க்கை அம்மன் கோவில், கீழ செல்லையாபுரம் செல்லியம்மன் கோவில், வெற்றிலையூரணி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

சிவகாசி பஸ் நிலையத்தில் உள்ள துர்க்கை பரமேஸ்வரி கோவிலில் அம்மன் பூபாவாடை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆலங்குளம்

ஆலங்குளம் அருகே உள்ள தொம்பகுளத்தில் உள்ள முத்தாலம்மன்கோவில், வடக்கத்தியம்மன் கோவிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வத்திராயிருப்பு முத்தாலம்மன், தாணிப்பாறை விலக்கில் அமைந்துள்ள கலங்கரை அம்மச்சாரம்மன் கோவில், அர்ச்சனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நல்லதங்காள் அம்மன் கோவிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் ஆயிரங்கண் மாரியம்மன் கோவில், காரியாபட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தளவாய்புரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story