விபத்தை தடுக்க 20 இடங்களில் வேகத்தடை அமைப்பு


விபத்தை தடுக்க 20 இடங்களில் வேகத்தடை அமைப்பு
x

அரக்கோணம் பகுதிகளில் விபத்தை தடுக்க 20 இடங்களில் வேகத்தடை அமைக்கும் பணி

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணம் பகுதிகளில் விபத்தை தடுக்க 20 இடங்களில் வேகத்தடை அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது.

அரக்கோணம் நகரின் பிரதான சாலைகளில் காலை, மாலை பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களிலும், விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட, வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அதிக அளவு நடைபெறுகிறது. பிரதான சாலைகள் பந்தைய சாலைகளாக காட்சி அளிப்பதை தடுக்கவும், விபத்துக்களை கட்டுபடுத்தவும் ராணிபேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் அரக்கோணம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலகண்ணன் ஆகியோரின் தலைமையில் அரக்கோணம் எஸ்.ஆர். கேட் முதல் நாகாலம்மன் நகர் வரை உள்ள பிரதான சாலைகளில் 20 இடங்களில் இரவில் ஒளிரும் வகையில் பைபர் வேகத் தடைகள் அமைத்து வருகின்றனர். மேலும் பழுதடைந்துள்ள போக்குவரத்து சிக்னல்களும் சரி செய்யப்பட்டன.

இது இன்ஸ்பெக்டர் கமலகண்ணன் கூறுகையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டாலோ, அதிக சத்தத்துடன் ஹாரன் அடிப்பது, அதிவேகத்துடன் வாகனங்கள் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். அப்போது அரக்கோணம் நகராட்சி என்ஜினீயர் ஆசிர்வாதம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story