தி.மு.க. தெருமுனை பிரசாரம்


தி.மு.க. தெருமுனை பிரசாரம்
x

பாப்பாரப்பட்டி பகுதியில் தி.மு.க. தெருமுனை பிரசாரம் நடந்தது.

தர்மபுரி

தமிழ்நாடு முதல்-அமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதியில் தி.மு.க சார்பில் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடைபெற்றது. அ.பாப்பாரப்பட்டி, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரசார கூட்டங்களுக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். கூட்டங்களில் தலைமை கழக பேச்சாளர் தேவபாலன் கலந்துகொண்டு தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்தும், தமிழக அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார். இந்த கூட்டங்களில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, ஒன்றிய கழகச் செயலாளர் சபரிநாதன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிரிந்தா நடராஜன், ஒன்றிய குழு துணை தலைவர்கள் பாடி சேட்டு, பெரியண்ணன், கவுன்சிலர்கள் தமிழ்செல்வன், பத்மா சிவகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story