காரைக்குடியில், காங்கிரசார் அறவழி போராட்டம்


காரைக்குடியில், காங்கிரசார் அறவழி போராட்டம்
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:46 PM GMT)

காரைக்குடியில், காங்கிரசார் அறவழி போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை

காரைக்குடி

ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காரைக்குடி காந்தி திடலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்அறவழியில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. அறவழிப் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, மாங்குடி எம்.எல்.ஏ., கரு.மாணிக்கம் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பி.எல். காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வக்கீல் பிரிவு மாநில இணை செயலாளர் ராமநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் சித்திக், காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, காங்கிரஸ் தொழிற்சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவி இமயம் மடோனா, நகர் மன்ற உறுப்பினர்கள் ரெத்தினம், அஞ்சலி, அமுதா, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நெல்லியான், காரைக்குடி நகர செயலாளர்கள் குமரேசன், ரெயில்வே தட்சிணாமூர்த்தி இளைஞர் காங்கிரஸ் மாநில துணைச்செயலாளர்கள் ராஜிவ் கண்ணா, அருணா, கல்லல் ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், பெரிய கோட்டை கவுன்சிலர் செந்தில், வட்டார தலைவர்கள் சாக்கோட்டை கருப்பையா செல்வம், பேரூராட்சி நிர்வாகிகள் கண்டனூர் குமார், பள்ளத்தூர் கொத்தரி கருப்பையா, புதுவயல் முத்துக்கண்ணன் மற்றும் மாவட்ட, நகர, வட்டார, பேரூர் மற்றும் சார்பு அமைப்புக்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அறவழி போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.


Next Story