மத்திய ரெயில்வே மந்திரிக்கு 5 ஆயிரம் தபால் அட்டை அனுப்பும் போராட்டம்


மத்திய ரெயில்வே மந்திரிக்கு 5 ஆயிரம் தபால் அட்டை அனுப்பும் போராட்டம்
x

சீர்காழியில் விரைவு ரெயில்களை நிறுத்தக்கோரி மத்திய ரெயில்வே மந்திரிக்கு 5 ஆயிரம் தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி ரெயில் நிலையத்தில் பெரும்பான்மையான விரைவு ரெயில்கள் நின்று சென்றன. இதனால் பக்தர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட விரைவு ரெயில்கள் தற்போது சீர்காழியில் நின்று செல்லாததால் வர்த்தகர்கள், பக்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ரெயிலில் பயணம் செய்ய வேண்டுமானால் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயிலாடுதுறை அல்லது சிதம்பரத்திற்கு சென்றுதான் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. சீர்காழி ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டுமென போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மத்திய ரெயில்வே மந்திரிக்கு, சீர்காழியில் விரைவு ரெயில்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி 5 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடந்தது. இதில் சங்க தலைவர் கஜேந்திரன் தலைமையில் சீர்காழி தலைமை தபால் நிலையத்தில் இருந்து மத்திய மந்திரிக்கு தபால் அட்டைகளை அனுப்பி வைத்தனர்.


Next Story