உடுமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளில் பொதுப்பிரிவில் தரவரிசைப்படி மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வின்2-வது நாளில் 245 மாணவர்கள் சேர்ந்தனர்.
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளில் பொதுப்பிரிவில் தரவரிசைப்படி மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வின்2-வது நாளில் 245 மாணவர்கள் சேர்ந்தனர்.
அரசு கலைக்கல்லூரி
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 14 இளநிலை பட்டப்படிப்புகளும், 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன. இதில்2022-2023-ம் கல்வியாண்டிற்கு இளநிலை பாடப்பிரிவுமாணவர்களுக்கான சேர்க்கை அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது.
இந்த கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம்864இடங்கள் உள்ளன. முதல்கட்ட கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் (மாற்றுத்திறனாளிகள், தேசியமாணவர் படை, விளையாட்டுத்துறை) 18 மாணவர்கள் சேர்ந்தனர்.
தரவரிசைப்படி கலந்தாய்வு
இதைத்தொடர்ந்து தரவரிசைப்படி பொதுப்பிரிவு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு 10-ந் தேதி நடைபெற்றது.
மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியலில் 1 முதல் 1,000 வரையிலான இடங்களைப் பெற்றிருந்த மாணவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்றனர். இதில் பல்வேறு பாடப்பிரிவுகளில் மொத்தம் 296 மாணவ,மாணவிகள் சேர்ந்தனர்.
நேற்று தர வரிசை எண்1,001 முதல் 1,800 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடந்தது. இதில் இயற்பியல் பாடப்பிரிவில் 19 மாணவர்களும், வேதியியல் பாடப்பிரிவில் 19 மாணவர்களும், தாவரவியல் பாடப்பிரிவில் 4 மாணவர்களும், கணிதவியல் பாடப்பிரிவில் 5 மாணவர்களும், கணினி அறிவியல் பாடப்பிரிவில் 37 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 16 மாணவர்களும், புள்ளியியல் பாடப்பிரிவில் 9 மாணவர்களும், பொருளியல் பாடப்பிரிவில் 23 மாணவர்களும், பி.காம் பாடப்பிரிவில் 36 மாணவர்களும், பி.காம் (சி.ஏ) பாடப்பிரிவில் 30மாணவர்களும்,பி.காம்(இ.காம்)பாடப்பிரிவில் 23மாணவர்களும், பி.பி.ஏ.பாடப்பிரிவில் 24 மாணவர்களும் என மொத்தம் 245 மாணவ,மாணவிகள் சேர்ந்தனர்.
559 மாணவர்கள்
அவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி சான்றை அந்தந்த மாணவ,மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி வழங்கினார்.கலந்தாய்வின் மூலம்இதுவரை 559மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
முதல் கட்ட கலந்தாய்வின் 4-வதுநாளான இன்று (வெள்ளிக்கிழமை) தரவரிசை எண் 1,801 முதல் 2,600 வரையிலானமாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறஉள்ளது.