தியாகதுருகம் அருகே விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்


தியாகதுருகம் அருகே விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தாா்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்.நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 59) தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்கு விசாரணைக்காக பானையங்கால் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தியாகதுருகம் வி.புதூர் பிரிவு சாலை அருகே சென்ற போது சாலையில் நெல் குவித்து தார்ப்பாய் மூடப்பட்டு அதன் அருகே வைக்கப்பட்டிருந்த கல் மீது மணியின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story