குமரி மகளிர் போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு
குமரி மகளிர் போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு
நாகர்கோவில்:
தமிழ்நாடு காவல்துறை சார்பில் மகளிர் போலீசாரின் 50-வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மகளிர் போலீசார் மட்டும் பங்கு பெற்ற சென்னை பழவேற்காட்டில் இருந்து கோடியக்கரை வரை சென்று திரும்பும் சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவு பாய்மர படகு பயணத்தை கடந்த 10-ந் தேதியன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பாய்மர படகு பயணமானது 1000 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதில் குமரி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா, பெண் போலீஸ் ஏட்டுகள் சோனியா காந்தி, மஞ்சு உள்பட பிற மாவட்ட மகளிர் போலீசார் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்தநிலையில் பாய்மர படகில் 1000 கிலோ மீட்டர் பயணம் செய்த மகளிர் போலீசார் கிருத்திகா, சோனியா காந்தி மற்றும் மஞ்சு ஆகியோரை நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வாழ்த்தி பாராட்டினார். பின்னர் அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.