கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற பரோட்டா மாஸ்டர்


கழுத்தை பிளேடால் அறுத்து   தற்கொலைக்கு முயன்ற பரோட்டா மாஸ்டர்
x
திருப்பூர்

வீரபாண்டி:

நெல்லை மாவட்டம் கருவலூர் பகுதியைச் சேர்ந்தவர் வின்சர் (வயது 40). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர் தனது குடும்பத்தை விட்டுவிட்டு திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் தங்கி, ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் அடிக்கடி மது குடித்துவிட்டு குடும்பத்தை நினைத்து புலம்பி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு முருகம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் வைத்து குடிபோதையில் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வீரபாண்டி போலீசார விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story