பத்திரகாளியம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை


பத்திரகாளியம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி கொட்டங்காடு பத்திரகாளியம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி கொட்டங்காடு தேவிஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு கடந்த 17-ந் தேதி இரவு பவள முத்து விநாயகர் மற்றும் தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. 18-ந் தேதி இரவு 7 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் உள் பிரகார சப்பர பவனி மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா சுந்தர ஈசன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story