தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா
x

கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கரூர்,

வருங்கால வைப்பு நிதி

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை கலைத்து, தேசிய ஓய்வூதியத்தின் கீழ் உள்ள அனைத்து சந்தாதாரர்களையும் வரையறுக்கப்பட்ட பயனளிப்பு ஓய்வூதிய முறையின் கீழ் கொண்டு வரவேண்டும்.அகவிலைப்படி, சரண்விடுப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா தொற்றுக்காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

தர்ணா போராட்டம்

மத்திய, மாநில அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் அன்பழகன் வரவேற்றார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் சிறப்புரை ஆற்றினார். இதில் மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாவட்ட செயலாளர் சக்திவேல், பொருளாளர் பொன்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story