அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழக கவர்னர் சாமி தாிசனம்


அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழக கவர்னர் சாமி தாிசனம்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தாிசனம் செய்தார். பின்னர் சிறிது தூரம் கிரிவலப்பாதையில் கிரிவலம் மேற்கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தாிசனம் செய்தார். பின்னர் சிறிது தூரம் கிரிவலப்பாதையில் கிரிவலம் மேற்கொண்டார்.

சாமி தரிசனம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்கள் மற்றும் இயற்கை விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் ரமணாஸ்ரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபாடு செய்தார்.

இரவு கிரிவலம் செல்வதாக இருந்த நிலையில் மழையின் காரணமாக நேற்று முன்தினம் இரவு கிரிவலம் ரத்து செய்யப்பட்டது.

2-வது நாளான நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் திருமஞ்சன கோபுரம் வழியாக கோவிலுக்குள் வந்து சம்பந்த விநாயகர் சன்னதி, அருணாசலேஸ்வரர் சன்னதி, உண்ணாமலையம்மன் சன்னதி, நவகிரக சன்னதி, பெரிய நந்தி, பாதாள லிங்கம் ஆகிய இடங்களில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.

கவர்னர் கிரிவலம்

அதை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அப்போது அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜோதி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டாக்டர் மீனாட்சி சுந்தரம், டி.வி.எஸ். ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் கவர்னர் கிரிவலப்பாதையில் நிருதி லிங்கத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு திருநேர் அண்ணாமலையார் சன்னதி வரை நடந்து கிரிவலம் சென்றார்.

இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story