தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பம் இயல்பைவிட அதிகரிக்கும் - வானிலை மையம்


தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பம்  இயல்பைவிட அதிகரிக்கும் - வானிலை மையம்
x
தினத்தந்தி 15 April 2023 8:44 AM GMT (Updated: 15 April 2023 10:32 AM GMT)

தமிழ்நாட்டில் வெப்பநிலை இன்றும் நாளையும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வெயில் வழக்கத்தை விட சற்று அதிகரித்து கானப்படும் நிலையில், மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர்.

கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள், இளநீர், தர்பூசனி, மற்றும் குளிர்பான கடைகளை நோக்கி குவிகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வெயில் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 19ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.



Next Story