ஆக்கி போட்டியில் தஞ்சை அணி முதலிடம்
ஆக்கி போட்டியில் தஞ்சை அணி முதலிடம் பிடித்தது
தஞ்சாவூர்
தஞ்சாவூர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சை மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பாக மாவட்ட அளவிலான ஆக்கி லீக் போட்டி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் தொடங்கி வைத்தார். இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், ஆக்கி கழகம் மற்றும் கிளப் அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 5 அணிகள் பங்கேற்றன. இவற்றில் தஞ்சை லெவன் ஆக்கி அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. இந்த அணி மண்டல அளவிலான ஆக்கி லீக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது.
Related Tags :
Next Story