டாஸ்மாக் கடை மூடல்


டாஸ்மாக் கடை மூடல்
x

காரியாபட்டி அருகே டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி தாலுகா மேலதுலுக்கன்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ெபரிதும் சிரமப்பட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக மேல துலுக்கன்குளம், கீழத்துலுக்கன்குளம், நந்திக்குண்டு, அச்சங்குளம் மற்றும் பிசிண்டி கிராம மக்களுக்கும் இடையூறாக மேலத்துலுக்கன்குளம் டாஸ்மாக் கடை இருந்து வந்தது. எனவே இந்த கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து மனு கொடுத்தனர். பொதுமக்களின் மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, அந்த கடையை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மேலதுலுக்கன்குளம் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது. அப்பகுதி மக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.Next Story