இணையவழி கல்வி வானொலியில் கற்பிக்கும் ஆசிரியைகள்


இணையவழி கல்வி வானொலியில் கற்பிக்கும் ஆசிரியைகள்
x

பழனி பகுதியில், இணையவழி கல்வி வானொலியில் கற்பிக்கும் ஆசிரியைகளை கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

திண்டுக்கல்

கொரோனா தொற்று காலத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காமல் இருக்க இணையம் வழியாக ஆசிரியர்கள் பாடங்கள் எடுத்தனர். குறிப்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டு முயற்சியால் இணையவழி கல்வி வானொலி தொடங்கப்பட்டது. இதில் பாடம் சம்பந்தமான ஆடியோக்களை ஆசிரியர்கள் பதிவேற்றினர். இந்த வானொலி தற்போது வரை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இணையவழி வானொலியில் பழனியை சேர்ந்த அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியைகளான கோகிலவாணி, உசானா பர்வீன், ஆரோக்கிய மேரி, லீமாரோஸ், மரிய ஜோதிமணி, ஜாக்குலின்மேரி, செல்வி, லீனா, ஜெயதங்கம், ஏஞ்சல், சந்தனசுந்தரி ஆகியோர் இணையவழி வானொலியில் பாடம் சம்பந்தமான ஆடியோக்களை பதிவு செய்தனர். இதனை, பழனி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் கேட்டு பயனடைந்தனர்.

இதையடுத்து மேற்கண்ட ஆசிரியைகளுக்கு தனியார் உலக சாதனை அமைப்பின் சார்பில் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட ஆசிரியைகளை திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ஜெகநாதன் ஆகியோர் பாராட்டினர்.


Next Story