மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி
புகழூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாலிபர் பலி
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள கூடலூர் மீனாட்சி பேட்டை வைத்தி முதலி தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் பஞ்சமூர்த்தி (வயது 36). இவர் நேற்று முன்தினம் பாஸ்ேபார்ட் எடுத்து வருவதற்காக வெளியூர் செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்துள்ளார். நேற்று காலை கரூர் மாவட்டம் புகழூர் அருகே மலையம்பாளையம் பிரிவு பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் பஞ்சமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பஞ்சமூர்த்திக்கு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
டிரைவருக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பஞ்சமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய டிரைவரை போலீசார் வழக்குப்பதிந்து வலைவீசி தேடி வருகின்றனர்.