மேலூர் அருகே கோவில் விழா: 100 ஆடுகள், சேவல்கள் பலியிட்டு கறிவிருந்து - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


மேலூர் அருகே கோவில் விழா:  100 ஆடுகள், சேவல்கள் பலியிட்டு கறிவிருந்து  - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
x

மேலூர் அருகே கோவில் விழாவையொட்டி 100 ஆடுகள், சேவல்கள் பலியிட்டு கறிவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே கோவில் விழாவையொட்டி 100 ஆடுகள், சேவல்கள் பலியிட்டு கறிவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சிவராத்திரி விழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருச்சி நான்கு வழி சாலையில் சத்தியபுரம் முன்பாக மரங்கள் சூழ்ந்த இடத்தில் இலந்தைமரத்தடியில் பழமையான முத்துபிள்ளையம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரிையயொட்டி 3-வது நாள் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். அன்று கறி விருந்து சமைத்து அன்னதானமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான அன்னதான விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி மருளாடி என அழைக்கப்படும் பெண் சாமியாடி, கோவில் பகுதியில் பரப்பி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மல்லிகை பூக்களில் சர்ப்பவடிவில் நாகம் போன்று சாமியாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார். அதனை தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கையாக விட்பட்ட நூற்றுக்கணக்கான கிடாய்கள், சேவல்களை பலியிட்டு சிறப்பு பூஜை செய்தனர். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.

கமகம கறிவிருந்து

பின்னர் அங்குள்ள தென்னந்தோப்பில் ஏராளமான பாத்திரங்களில் ஆட்டு இறைச்சி மற்றும் சேவல்களை சமைத்து கமகமவென உணவு சமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கு கமகம கறிவிருந்து வழங்கப்பட்டது. பொதுமக்கள் வரிசையாக நின்று தட்டில் சாப்பாட்டை வாங்கி சென்று சாப்பிட்டனர்.


Next Story