பட்டியல் இன மக்களை புறக்கணித்ததாக கூறி சாலை மறியல்


பட்டியல் இன மக்களை புறக்கணித்ததாக கூறி சாலை மறியல்
x

குடவாசல் அருகே கோவில் விழாவில் பட்டியல் இன மக்களை புறக்கணித்ததாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர்

திருவாரூர்;

குடவாசல் அருகே கோவில் விழாவில் பட்டியல் இன மக்களை புறக்கணித்ததாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மகாமாரியம்மன் கோவில்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அரசவனங்காட்டில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இதே கிராமத்தில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வர முடிவு செய்தனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பட்டியல் இன மக்கள் திருவாரூர் உதவி கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

சாலை மறியல்

இதைத்தொடர்ந்து உதவி கலெக்டர் சங்கீதா சம்பவ இடத்துக்கு சென்று இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடையாத பட்டியல் இன மக்கள், தாங்களும் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம். தவறும் பட்சத்தில் திருவிளக்கு பூஜையை நடக்கக்கூடாது என கூறி அரசவனங்காடு சின்னக்கண்ணு மகன் வடிவேலு தலைமையில் 30 பெண்கள் உட்பட 50 பேர் அரசவனங்காடு பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

35 பேர் மீது வழக்கு

இதைத்தொடர்ந்து உதவி கலெக்டர் மீண்டும் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு தரப்பினரும் சமாதானம் அடையாததால் கோவில் பூட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து குடவாசல் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story