திருபுவனம் கைதி உடல் சொந்த ஊருக்கு வந்தது
திருபுவனம் கைதி உடல் சொந்த ஊருக்கு வந்தது
கும்பகோணம் அருகே திருபுவனம் ராமலிங்கம் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் திருவிடைமருதூர் போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்து 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கைது செய்யப்பட்ட திருபுவனம் வடக்கு முஸ்லிம் தெருவை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிளை செயலாளர் சர்புதீன் (வயது 65) என்பவர் பூந்தமல்லி சிறையில் இருந்தார். அங்கு அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதையடுத்து கடந்த 5 தினங்களுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி சர்புதீன் உயிரிழந்தார். நேற்று மாலை சென்னையில் இருந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் திருபுவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இறந்த சர்புதீன் வீடு உள்ள வடக்கு முஸ்லிம் தெரு, கடைவீதி உள்ளிட்ட திருபுவனம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.