தப்பியோடிய குற்றவாளி சென்னையில் பிடிபட்டார்


தப்பியோடிய குற்றவாளி சென்னையில் பிடிபட்டார்
x

தப்பியோடிய குற்றவாளி சென்னையில் பிடிபட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தில் எலக்ட்ரீசியன் பாண்டியன் வீட்டில் கடந்த மே மாதம் 8-ந் தேதி நகை-காரை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்ற வழக்கில் 9 பேரில், 5 பேரை கடந்த 15-ந் தேதி தனிப்படை போலீசார் கைது செய்து, பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் 5 பேரை பெரம்பலூர் போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்ற போது, அதில் சென்னை பெருங்குடி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் பிரசாந்த் (வயது 26) என்பவர் பாதுகாப்பிற்கு வந்திருந்த போலீசாரை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் சென்னையில் தலைமறைவாகி இருந்த பிரசாந்த்தை பெரம்பலூர் போலீசார் நேற்று பிடித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story