போலீசாருக்கு சவால் விட்டவர் கைது


போலீசாருக்கு சவால் விட்டவர் கைது
x

போலீசாருக்கு சவால் விட்டவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

முக்கூடல்:

கீழபாப்பாக்குடியை சேர்ந்தவர் தங்கராஜா (வயது 33). இவர் கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி அங்குள்ள புதுக்குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நத்தன்தட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் தங்கராஜாவை இங்கு குளிக்கக்கூடாது என அவதூறாக பேசி கீழே தள்ளிவிட்டு அரிவாளை தாக்க முயற்சி செய்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து தங்கராஜா கொடுத்த புகாரின் பேரில் பாப்பாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை தேடி வந்தனர். அப்போது பாலகிருஷ்ணன், காவல்துறை என்னை முடிந்தால் பிடிக்கட்டும் என போலீசாருக்கு சவால் விடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி பாலகிருஷ்ணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story