தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர் கைது


தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர் கைது
x

தி.மு.க. கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர் கைது

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியில் நகர தி.மு.க. சார்பில் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தி.மு.க. கொடியேற்று விழாவிற்காக நகரின் பல்வேறு இடங்களில் புதிதாக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காரைக்குடி இடத்தெரு நான்கு ரோடு சந்திப்பிலும் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கொடி கம்பத்தை ெரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(வயது 36) என்பவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தட்டிக்கேட்ட அப்பகுதி தி.மு.க.வினரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காரைக்குடி நகர தி.மு.க. செயலாளர் குணசேகரன் காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story