நெல்லைக்கு 13 மணி நேரம் தாமதமாக வந்த மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்


நெல்லைக்கு 13 மணி நேரம் தாமதமாக வந்த மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்
x

வழித்தடம் மாற்றி இயக்கப்படுவதால் மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லைக்கு 13 மணி நேரம் தாமதமாக வந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

மும்பை -நாகர்கோவில் இடையே வாரத்தில் 6 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ெரயில் 4 நாட்கள் சேலம் வழியாகவும், 2 நாட்கள் திருச்சி வழியாகவும் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் சேலம் வழியாக நேற்று முன்தினம் இயக்கப்பட்ட மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் 13 மணி நேரம் தாமதமாக நெல்லைக்கு வந்து சேர்ந்தது. அதாவது நெல்லைக்கு நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு வரவேண்டிய இந்த ரெயில் இரவு 9.30 மணிக்கு நெல்லை சந்திப்புக்கு வந்து சேர்ந்தது. பின்னர் நாகர்கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றது. புனே நகருக்கும்- குர்துவாடி நகருக்கும் இடையே இந்த ரெயில் வழித்தடம் மாற்றி இயக்கப்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த ெரயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.


Next Story