தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேசிய கொடி வழங்கினர்


தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேசிய கொடி வழங்கினர்
x

கிராம மக்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேசிய கொடி வழங்கினர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இல்லந்தோரும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சியை தேசிய பேரிடர் மீட்பு படையின் கமாண்டண்ட் கபில் வர்மன் தொடங்கி வைத்தார்.

இதில் 200 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு கையில் தேசிய கொடியை ஏந்தியபடி உரியூர் மற்றும் நகரி குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று தேசிய கொடியை வழங்கினர். அப்போது பொது மக்களிடம் நாளை (சனிக்கிழமை) முதல் 15-ந்தேதி வரை வீட்டில் தேசிய கொடி ஏற்றி வைக்கும்படி தெரிவித்தனர்.


Next Story