விபத்தில் முதியவர் பலி


விபத்தில் முதியவர் பலி
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:45 PM GMT)

விபத்தில் முதியவர் பலியானார்.

சிவகங்கை

காரைக்குடி

குன்றக்குடி போலீஸ் சரகம் கோவிலூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 65). இவர் தனது வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக பில்லர் அமைப்பதற்கு குழி தோண்டப்பட்டிருந்தது. கட்டிட வேலைக்காக லாரியில் எம்.சாண்ட் மணல் கொண்டுவரப்பட்டது. அதனை இறக்குவதற்காக லாரி பின்னோக்கி நகர்ந்த போது பில்லருக்காக தோண்டப்பட்டிருந்த குழியில் இறங்கி கவிழ்ந்தது. அப்போது அருகே நின்றிருந்த சந்திரனும் நிலை தடுமாறிய அக்குழியில் விழுந்துவிட்டார்.

மேலும் லாரி காம்பவுண்ட் சுவரில் மோதியதில் அதன் இடிபாடுகளிலும் சிக்கிய சந்திரன் இறந்துவிட்டார். இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story