தேங்காயை எடுக்க முயன்றபோது கிணற்றில் மூழ்கி முதியவர் சாவு


தேங்காயை எடுக்க முயன்றபோது கிணற்றில் மூழ்கி முதியவர் சாவு
x

தேங்காயை எடுக்க முயன்றபோது கிணற்றில் மூழ்கி முதியவர் பலியானார்.

வேலூர்

வேலூர்

தேங்காயை எடுக்க முயன்றபோது கிணற்றில் மூழ்கி முதியவர் பலியானார்.

வேலூர் அருகில் உள்ள பாப்பான்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 95). இவருக்கு சொந்தமான விவசாய கிணறு அந்தப் பகுதியில் உள்ளது. கிணற்றின் அருகே தென்னை மரங்களும் உள்ளன. தென்னைமரத்தில் இருந்து தேங்காய் ஒன்று கிணற்றில் விழுந்து மிதந்துள்ளது.

நேற்று முன்தினம் தேங்காயைப் பார்த்த கோவிந்தசாமி தென்னை மட்டையால் அந்தத் தேங்காயை எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் அரியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story