கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது


கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
x

கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

தஞ்சாவூர்

கும்பகோணம் சாந்தி நகரில் உள்ள தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி கொள்ளை முயற்சி நடந்ததாக தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் ஜாபர் அலி கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதேபோல் திருவிடைமருதூர் அருகே விளந்த கண்டம் மெயின் சாலையில் ஒரு கடை மற்றும் 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்தது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ரோசின் தாரா (வயது36) கொடுத்த புகாரின் பேரில் சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 இடங்களிலும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த முத்து சேர்வை பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற ஓகை குமார் (64) என்பவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story