வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கும் பணி


வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கும் பணி
x

திருவாரூர் நகராட்சியில் வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கும் பணியை நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி ஆகிய 4 நகராட்சிகளுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 50 ஆயிரத்து 633 தேசியக் கொடிகள் தயார் செய்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 35 மகளிர் சுய உதவி குழுக்கள் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி தேசியக் கொடிகள் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகளில் 15 ஆயிரத்து 971 வீடுகளுக்கு தேசியக்கொடிகளை வழங்கும் பணியினை நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரபாகரன், மேலாளர் முத்துக்குமார், நகர சபைமன்ற உறுப்பினர் அசோகன், துப்புரவு அலுவலர் மூர்த்தி, நகர் மன்ற எழுத்தர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story