தூத்துக்குடி: நள்ளிரவில் வேட்டைக்கு சென்ற கோவில் பூசாரி கிணற்றில் விழுந்து பலி


தூத்துக்குடி: நள்ளிரவில் வேட்டைக்கு சென்ற கோவில் பூசாரி கிணற்றில் விழுந்து பலி
x

தூத்துக்குடி அருகே நள்ளிரவு சாமியாடியபடி காட்டுப்பகுதிக்குச் சென்ற கோயில் பூசாரி கிணற்றில் விழுந்து பலியானார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகேயுள்ள தெய்வச்செயல்புரத்தைச் சேர்ந்தவர் முருகன் (55). இவர் எல்லப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயில் பூசாரியாக உள்ளார். இந்நிலையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு முருகன் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு சாமியாடியபடி காட்டுப்பகுதிக்குள் வேட்டைக்குச் சென்றாராம்.

நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் ஊர் மக்கள் காட்டுப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது அங்குள்ள கிணற்றில் முருகன் சடலமாக கிடந்துள்ளார். இதையெடுத்து, புதுக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று முருகனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாமியாடியபடி காட்டுப்பகுதிக்குள் சென்ற பூசாரி முருகன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story