திருமண நிகழ்ச்சியில் திருடியவர் கைது


திருமண நிகழ்ச்சியில் திருடியவர் கைது
x

நெல்லையில் திருமண நிகழ்ச்சியில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ.காலனியில் உள்ள சமுதாய கூடத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரெட்டியார்பட்டி கே.கே.நகரை சேர்ந்த ஞானதுரை (வயது 57) என்பவரின் பேரன் அணிந்திருந்த 2¼ பவுன் தங்கச்சங்கிலி காணாமல் போனதாக, பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மூலக்கரை சேர்ந்த செல்வகுமார் (36) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகையை மீட்டனர்.


Next Story