கொலை முயற்சியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை முயற்சியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லை அருகே கொலை முயற்சியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரின் மகன் கருத்தப்பாண்டி என்ற கண்ணன் (வயது 44). இவர் மீது திருட்டு, அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக சுத்தமல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று, கருத்தப்பாண்டி என்ற கண்ணனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து கருத்தப்பாண்டி என்ற கண்ணனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழங்கினார்.


Next Story