மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் பலி
திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை தாலுகா வெளுங்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்பவரின் மகன் சந்துரு (வயது 20), சீட்கவர் வியாபாரம் செய்து வந்தார்.
இவர் நேற்று கீழ்கச்சிராப்பட்டு கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
இரவு சுமார் 10 மணியளவில் திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில் உள்ள வாணியந்தாங்கல் ரிங் ரோடு சந்திப்பில் வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.