ஓடையில் தவறி விழுந்து தொழிலாளி பலி


ஓடையில்  தவறி விழுந்து தொழிலாளி பலி
x

ஓடையில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

மதுரை

வாடிப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை விளாம்பட்டியை சேர்ந்தவர் தொத்தன் (வயது 43). இவர் வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தங்கி ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்து வந்தார். நேற்று வாடிப்பட்டி பகுதியில் பெய்த பலத்த மழையினால் அந்த பகுதியில் உள்ள ஓடையில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.

அப்போது அந்த வழியாக நடந்து சென்ற தொத்தன் எதிர்பாராதவிதமாக ஓடையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Related Tags :
Next Story