வெள்ளரி பழங்கள் விளைச்சல் அமோகம்


வெள்ளரி பழங்கள் விளைச்சல் அமோகம்
x

வெம்பக்கோட்டை பகுதிகளில் வெள்ளரி பழங்கள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விருதுநகர்

தாயில்பட்டி

வெம்பக்கோட்டை பகுதிகளில் வெள்ளரி பழங்கள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வெள்ளரி பழங்கள்

சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி, வெம்பக்கோட்டை ஒன்றியம் பழையாபுரம், பி.திருவேங்கடபுரம், காக்கிவாடன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மாத பயிரான வெள்ளரி பழங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது வெள்ளரி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

இதுகுறித்து பந்துவார்பட்டி விவசாயி மாரிசாமி கூறியதாவது:-

வெள்ளரி பழங்கள் அதிக நீர்ச்சத்து கொண்டதாகும். கோடையில் அக்கி, அம்மை, நோய்களை தடுக்கும் ஆற்றல் வெள்ளரி பழங்களுக்கு உண்டு. இதில் மருத்துவ குணம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்கின்றனா்.

விளைச்சல் அதிகம்

பழங்களை சிறிது கூட வீணாக்காமல் முழுவதும் சாப்பிடக்கூடிய அதிக மாவு சத்து கொண்ட உணவுப் பொருளாகும். கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்ட வெள்ளரிப்பழங்கள் எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகமாக கிடைத்துள்ளது. தற்போது வெள்ளரி பழம் ரூ. 50 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த பழங்களை இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் அண்டை மாவட்டத்தில் இருந்தும், எண்ணற்ற பேர் வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story