திம்பம் மலைப்பாதையில் மினி வேன் கவிழ்ந்தது


திம்பம் மலைப்பாதையில்   மினி வேன் கவிழ்ந்தது
x

திம்பம் மலைப்பாதையில் மினி வேன் கவிழ்ந்தது.

ஈரோடு

தாளவாடி

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஆட்டுத்தோல் பாரம் ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்றுகொண்டு இருந்தது. நேற்று காலை 9 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 10-வது கொண்டை ஊசி வளைவில் மினி வேன் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். சாலை ஓரத்தில் மினி வேன் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story