மகாசக்தி மாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழா


மகாசக்தி மாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழா
x
திருப்பூர்

குடிமங்கலம்

கொங்கல்நகரத்தில் புகழ்பெற்ற மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது.

 இக்கோவிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியும், பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

 அதனைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்து கங்கையில் விடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

 நாளை ( வியாழக்கிழமை) மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், 3-ந் தேதி காலை 9 மணி முதல் அபிஷேக பூஜைகளும் அன்று இரவு நந்தாதீபம் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

 விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


Next Story