திருவள்ளூர்: ஓடிய பேருந்தின் அவசர கதவு வழியாக வெளியே விழுந்த பள்ளி சிறுவன்


திருவள்ளூர்: ஓடிய பேருந்தின் அவசர கதவு வழியாக வெளியே விழுந்த பள்ளி சிறுவன்
x

பொன்னேரியில் தனியார் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவர் அவசர கதவு வழியே கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பள்ளி முடிந்து வழக்கம் போல பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

கோளூர் அருகே பள்ளி பேருந்து சென்ற போது, பள்ளி பேருந்தின் அவரச கதவு திடீரென திறந்ததால், மாணவன் அதன் வழியே கீழே விழுந்தார். இதில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்காததால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.


Next Story