காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:46 PM GMT)

மன்னார்குடி காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி வாணக்காரத்தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 12-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கை அம்மனாக பாவித்து பூஜைகள் செய்தனர்.தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.பின்னர் காளியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு அம்மன் வீதிஉலா நடந்தது.நாளை(திங்கட்கிழமை) தீமிதி திருவிழா நடைபெறுகிறது.


Next Story