தூத்துக்குடி விளையாட்டு அரங்கில்நாய் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை


தூத்துக்குடி விளையாட்டு அரங்கில்நாய் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி விளையாட்டு அரங்கில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் எஸ்.இசக்கிமுத்துக்குமார் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஜார்ஜ் சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்து உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் பயிற்சி செய்கின்றனர். மேலும், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முதியவர் முதல் சிறுவர்கள் வரை நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மைதானத்தில் சமீபகாலமாக 20-க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தஞ்சம் புகுந்து விளையாட்டு வீரர்களையும், நடை பயிற்சி செய்யும் பொதுமக்களையும், சிறுவர்களையும் துரத்தி, கடிக்க முற்படுகிறது. இதனால் காலையும், மாலையும் மைதானத்தை பயன்படுத்தும் பொதுமக்கள், எங்கே தங்களை நாய் கடித்து விடுமோ என பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.

வருகிற 15-ந் தேதி இந்த மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா அணிவகுப்பு நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்பாக பொதுமக்களின் நலன் கருதி மைதானத்தில் சுற்றி தெரியும் வெறி நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது போன்ற வெறி நாய்கள் உள்ளே வராத வண்ணம் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளனர்.


Next Story