பில்லூர் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா


பில்லூர்  திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா
x

பில்லூர் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே பில்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டு 60-ம் ஆண்டாக தீமிதி திருவிழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் இரவில் சாமி திருவீதி உலாவும், தெருக்கூத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை தீமிதி விழா நடந்தது. இதையொட்டி கரகம் ஜோடிக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஊரணி பொங்கல் வைத்தும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story