த.மா.கா.வினர் நூதன போராட்டம்


த.மா.கா.வினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் த.மா.கா. வினர் நூதன போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு அலுவலக வளாகச் சாலையை விரிவு படுத்தி புதுப்பித்து, மின்விளக்கு வசதி செய்யக் கோரியும், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கலையரங்கம், வகுப்பறை கட்டிடங்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டக் கோரியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நேற்று தாலுகா அலுவலகம் முன்புள்ள விநாயகர் கோவில் முன்பு மலர் காவடி எடுத்து நூதன போராட்டம் நடத்தினா். போராட்டத்திற்கு நகரத் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். போராட்டத்தில் வட்டாரத் தலைவர் ஆழ்வார் சாமி, மாநில இளைஞரணி தலைவர் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கிருந்து மலர் காவடியுடன் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு நடை பயணமாக புறப்பட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் மோட்டார் சைக்கிளில் உதவி கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story