தீபாவளிக்கு அடுத்த நாள் பொதுவிடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை பொதுவிடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (12ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாட பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை தீபாவளியை கொண்டாடிவிட்டு அடுத்தநாளே அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்வதில் சிரமம் இருப்பதால் திங்கட்கிழமை (13ம் தேதி) பொதுவிடுமுறையாக அறிவிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தீபாவளிக்கு அடுத்த நாளான 13ம் தேதி திங்கட்கிழமை பொதுவிடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு திங்கட்கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பொதுவிடுப்பை ஈடுசெய்யும் வகையில் 18.11.2023 சனிக்கிழமை பணிநாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.