ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறபல்வேறு வியூகங்கள் அமைத்து வாக்கு சேகரித்து வருகிறோம்;முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ெசால்கிறார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற பல்வேறு வியூகங்கள் அமைத்து வாக்கு சேகரித்து வருகிறோம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
சோலார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற பல்வேறு வியூகங்கள் அமைத்து வாக்கு சேகரித்து வருகிறோம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
வாக்கு சேகரிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பழனி மலை வீதி, பெரியார் வீதி, நேரு வீதி உள்ளிட்ட இடங்களில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
இவருடன் 35-வது வட்ட கழக செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வளர்ச்சி இல்லை
தமிழகத்தில் மக்கள் நலன் தான் முக்கியம். பொதுமக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நலத்திட்டம் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். கடந்த 2 ஆண்டாக தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் வளர்ச்சி இல்லை. மக்களுக்கும் வளர்ச்சி கிடைக்கவில்லை. மொத்தத்தில் ஒரு பிரயோஜனமும் இல்லை. பொய் சொல்லி தி.மு.க. அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இதை மக்கள் 2 ஆண்டுகளில் புரிந்து கொண்டுள்ளனர்.
அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் அனைத்தையும் தி.மு.க. அரசு ரத்து செய்து உள்ளது. ஈரோட்டில் உள்ள பழனிமலை வீதி, முத்துசாமி வீதி, நேரு வீதி, பெரியார் வீதி உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாகச் சென்று அங்குள்ள குடியிருப்பு வாசிகளிடம் அ.தி.மு.க.வின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தேன்.
பல்வேறு வியூகங்கள்...
பொதுமக்களும் கவனமாக கேட்டு இரட்டை இலைக்கு வாக்களிப்பதாக தெரிவித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற பல்வேறு வியூகங்கள் அமைத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறோம். பணத்தால் வென்று விடலாம் என தி.மு.க. அரசு ஒருபோதும் எண்ணிவிடக்கூடாது. மக்களின் மனதில் தான் இடம் பிடிக்க வேண்டும். தற்போது மக்கள் மனதில் இரட்டை இலை சின்னம் நன்றாக பதிந்து விட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பதோடு அ.தி.மு.க.வின் சாதனைகளையும் எடுத்துக்கூறி கவனத்தை ஈர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.