மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை


மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காவிரி கடைமுக தீர்த்தவாரி திருவிழா நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.

அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது சிவாலயங்களில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.

இந்த தீர்த்தவாரி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் காவிரி கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார். மேலும் கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் எனவும் இந்த விடுமுறையை ஈடுகட்ட வருகிற 25-ம் தேதி வேலை நாளாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Next Story